சரக்கு வாகனத்தில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்


சரக்கு வாகனத்தில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
x

சரக்கு வாகனத்தில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா ராவணாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த வாகனத்தினுள் 40 கிலோ எடை கொண்ட 10 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த சரக்கு வாகன டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், மரக்காணம் அருகே வைடபாக்கத்தை சேர்ந்த சவுகத்அலி மகன் ஷபி (வயது 22) என்பதும், இவர் மரக்காணம் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச்சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ஷபியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.




Next Story