முத்திரையிடாத எடைக்கற்கள்-தராசுகள் பறிமுதல்


முத்திரையிடாத எடைக்கற்கள்-தராசுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Jan 2023 1:15 AM IST (Updated: 23 Jan 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சங்ககிரி:

சங்ககிரிபகுதிகளில் இறைச்சி, மீன், பழக்கடைகளில் நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் தலைமையில், சங்ககிரி தொழிலாளர் உதவி ஆய்வாளர் முருகேசன், திருச்செங்கோடு தொழிலாளர் உதவி ஆய்வாளர் அருண்குமார் உள்ளிட்ட குழுவினர்கள் மற்றும் போலீசாருடன் சங்ககிரி நகர் பகுதிகளில் உள்ள இறைச்சி, மீன் மற்றும் பழக்கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, முத்திரை மற்றும் மறு முத்திரை இடப்படாத மின்னணு தராசுகள் மற்றும் மேஜை தராசுகள் ஆகியவற்றை தொழிலாளர் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் கூறியதாவது:-

எடைக்கற்களில் முத்திரை மற்றும் மறு முத்திரை இடாமல் பயன்படுத்தி வரும் கடை உரிமையாளர்கள் மீது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுவரை முத்திரையிடாமல் எடைக்கற்களை பயன்படுத்தி வரும் வணிகர்கள் தங்களது எடைக்கற்களை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று முத்தரையிட்டு கொள்ள வேண்டும். மேலும் கடைகளில் மறு முத்திரை சான்றிதழ் பொதுமக்களுக்கு தெரியும்படி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story