ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்


ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
x

ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று காரியாபட்டி உழவர் சந்தை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 40 கிலோ கொண்ட 5 மூடைகளில் 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. வேனுடன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக கீழ மதுரையை சேர்ந்த வேன் உரிமையாளர் மற்றும் டிரைவர் மூர்த்தி (வயது21), மதுரை சி.எம்.ஆர். ரோட்டை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி நவீன் குமார் (20), அரிசி உரிமையாளர் ஆவியூரைச்சேர்ந்த பேச்சி (34) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story