விவசாயிகள்-குடியிருப்பு வாசிகள் இடையே தகராறு


விவசாயிகள்-குடியிருப்பு வாசிகள் இடையே தகராறு
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:16 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் கழுமலையாறு தூர்வாரும் பணியின் போது விவசாயிகள்-குடியிருப்பு வாசிகள் இடையே தகராறு

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழுமலையாறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் தற்பொழுது புழுகாப்பேட்டை முதல் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின் போது வாய்க்காலில் தூர்வாரப்படும் மண் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கு குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து தூர்வாரும் பணியினை தடுத்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் மீது புகார் செய்தனர். இந்த நிலையில் நேற்று தூர்வாரும் பணி நடைபெற்ற இடங்களை பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர் சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்பு வாசிகள் வாய்க்காலில் வெட்டப்படும் மண்ணை அருகில் உள்ள குடியிருப்புகளில் கொட்டக்கூடாது என தெரிவித்தார். இதனால் குடியிருப்பு வாசிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் அசாரதான சூழ்நிலை நிலவியது. இதில் கண்ணதாசன் (வயது 50) என்கின்ற குடியிருபபுவாசி தாக்கப்பட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இரு தரப்பினரும் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் ஆளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story