பள்ளி மாணவர்கள் இடையே மோதல்


பள்ளி மாணவர்கள் இடையே மோதல்
x

சங்கரன்கோவிலில் பரபரப்பு பள்ளி மாணவர்கள் இடையே மோதல்

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ஊத்துமலை செல்லும் பஸ்சில் சில மாணவ-மாணவிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை மற்றொரு தரப்பைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கிண்டல் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த மோதல் காரணமாக டிரைவரும், கண்டக்டரும் சேர்ந்து, தாக்கப்பட்டதாக கூறப்பட்ட மாணவிகளை அங்கேயே இறக்கி விட்டனர். மேலும் பஸ்சை அங்கேயே நிறுத்தினர். இதற்கிடையே மாணவிகளை தாக்கிய மற்றொரு தரப்பினர் அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு சென்றனர். இதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை அருகே திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து மாணவர்கள் மற்றொரு பஸ்சில் ஏறிச் சென்றனர்.


Next Story