பள்ளி மாணவர்களிடையே மோதல்


பள்ளி மாணவர்களிடையே மோதல்
x

ஆம்பூர் அருகே பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவரும், கதவாளம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவனும் அரங்கல்துருகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஒரு மாணவனுக்கு கண் புருவம் அருகே பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மாணவனை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த உமராபாத் போலீசார் 2 மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


Next Story