இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் கைது


இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் கைது
x

காதல் திருமணம் செய்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

காதல் திருமணம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி காலனி தெருவை சேர்ந்தவர் கரும்பாயிரம் மகன் செல்வராஜ். அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகள் ஆசியா. இருவரும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 10-ந் தேதி இரவு இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

2 பேர் கைது

இதில் செல்வராஜின் தம்பி பாண்டியனுக்கு காயம் ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பாண்டியன் அளித்த புகாரின் பேரில் பெண்ணின் தந்தை ராமசாமி (வயது 53), தாயார் அமுதா, சகோதரர் ரமணா (19) ஆகியோர் மீதும், அமுதா கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜ், பாண்டியன் ஆகியோர் மீதும் தா.பழூர் சப-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ராமசாமி, ரமணா ஆகியோரை ேபாலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story