இருதரப்பினர் இடையே மோதல்; 5 பேர் மீது வழக்கு
தா.பழூரில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் குமார், கோடங்குடி கீழத்தெருவை சேர்ந்த ஜவகர் மகன் ஜெகன். இவர்களுக்கு இடையே மரம் வெட்டுவதில் தகராறு ஏற்பட்டு ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று குமார் தனது டிராக்டரில் ரமேஷ் என்பவர் வயலுக்கு எரு ஏற்றி சென்றுள்ளார். அப்போது ஜெகன் மற்றும் குமார் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து குமார் மற்றும் ஜெகன் ஆகியோர் தா.பழூர் போலீசில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட ஜெகன், கிருஷ்ணன், கீதா, அமிர்தவல்லி, குமார் ஆகிய 5 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story