இருதரப்பினர் இடையே மோதல்; 6 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் இடையே மோதல்; 6 பேர் மீது வழக்கு
x

தா.பழூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தில் ஆண்டிமடம் தாலுகா குவாகம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் (வயது 45) என்பவர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார். அந்த நிலம் உள்ள பகுதியில் கொளஞ்சிநாதனுக்கும், கோடாலி கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கொளஞ்சிநாதனுக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்டிருந்த பைப் லைனை ரங்கநாதன் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதுபோல் ரங்கநாதன் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை கொளஞ்சிநாதன் மற்றும் அவரது தரப்பினர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ரங்கநாதன், கொளஞ்சிநாதன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த பவளக்கொடி, மயில் கண்ணன், சித்ரா, மல்லிகா ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story