Normal
இரு தரப்பினர் மோதல்; 11 பேர் மீது
இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி கிழக்கு மேடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). லட்சுமாயூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (45). இவர்கள் இருவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதற்கிடையே ஊராட்சி சார்பில் குணசேகரனுக்கு சொந்தமான இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்கு சூர்யா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் இரு தரப்பை சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story