நிலத்தகராறில் மோதல்; 9 பேர் மீது வழக்கு
நிலத்தகராறில் நடந்த மோதலில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்
தாரமங்கலம்:-
தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு கிராமம் கூடாரமேடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60), இவருடைய தம்பி செல்லதுரை (40). இவர்களுக்கு இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று செல்லதுரை, தனது நிலத்தில் வீடு கட்டும் பணியை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு சென்ற மாரிமுத்துக்கும், செல்லதுரைக்கும் தகராறு ஏற்பட்டு இருதரப்பு மோதலாக மாறியது. இதில் காயம் அடைந்தவர்கள் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி இரு தரப்பை சேர்ந்த மாரிமுத்து, லட்சுமி, ஞானசேகர், கிருஷ்ணன், குமார், பெருமாள், பாலகிருஷ்ணன், செல்லதுரை, சிவகாமி ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தாரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story