சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்
கே.சி.பட்டியில் சாலையோரத்தில் நிறுத்தப்படுகிற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திண்டுக்கல்
ஆடலூர், பன்றிமலை, பெரியூர், பாச்சலூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கே.சி.பட்டி வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை, மாலை வேளையில் அந்த வழித்தடத்தில் அதிக அளவில் பஸ்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் லாரி, கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களை சிலர் சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் பஸ்கள் விலகி செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அந்த இடத்தை விட்டு பிற வாகனங்கள் சென்ற பிறகே பஸ்கள் செல்கின்றன. அதுவரை சாலையோரத்தில் பஸ்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. கே.சி.பட்டியில் சாலையோரத்தில் நிறுத்தப்படுகிற வாகனங்களால் ஏற்படும் நெரிசலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story