மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் அமைச்சரிடம் வாழ்த்து


மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் அமைச்சரிடம் வாழ்த்து
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடலாடி அருகே கீழச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த மார்ச் 26-ந் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற உலக கோப்பை சக்கர நாற்காலி போட்டியில் இந்தியா, வங்காளதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு. நாடுகளின் அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டிகளில் இந்தியா சார்பில் வினோத் பாபு தலைமையில் இந்திய அணி கலந்து கொண்டது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை சக்கர நாற்காலி கிரிக்கெட்போட்டியில் கோப்பையை வினோத் பாபு தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.

வறுமையில் இருந்த வினோத் பாபுவிற்கு மாற்றுத்திறனாளி உலக கோப்பை சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேவையான உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம வளர்ச்சி நல வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்து கொடுத்தார். இந்நிலையில் மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலி கிரிக்கெட் கேப்டன் வினோத் பாபு தமிழகம் திரும்பியவுடன் நேற்று வெற்றி கோப்பையுடன் அமைச்சர் ராஜகண்ணப்பனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


Next Story