கயத்தாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


கயத்தாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
x

அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த கயத்தாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 566 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த பாலசுப்பிரமணியன், 520 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடம் பிடித்த பசரத்பாத்திமா, 519 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடம் பிடித்த வினித்குமார், 10-வகுப்பு பொதுத்தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த மாதவன், 369 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடம் பிடித்த முத்துசெல்வி, 368 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடம் பிடித்த காளீஸ்வரி ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் தேவி தலைமை தாங்கினார். கயத்தாறு பேரூராட்சி தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story