சாலையில் கிடந்த பர்சை ஒப்படைத்த கார் டிரைவருக்கு பாராட்டு


சாலையில் கிடந்த பர்சை ஒப்படைத்த கார் டிரைவருக்கு பாராட்டு
x

சாலையில் கிடந்த பர்சை ஒப்படைத்த கார் டிரைவருக்கு பாராட்டு

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் புதூரை சேர்ந்தவர் திருஞானம். இவரது மகன் கார்த்திக். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கார்த்திக் நேற்று மாலை திருப்புவனம் பைபாஸ் பாலம் அருகில் சென்றுள்ளார். அப்போது ரோட்டில் பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்து திறந்து பார்க்கும்போது உள்ளே ரூ.6500, சிறிய தங்கத்தோடு, தங்க மோதிரம், தங்க தாயத்து மற்றும் அடகு வைத்த ரசீது இருந்துள்ளது. ரசீதில் உள்ள போன் எண்ணை தொடர்பு கொண்டபோது விருதுநகர் மாவட்டம் பி.வாகைக்குளத்தை சேர்ந்த கடம்பவனம் என்பவர் பேசினார். அவர் பர்சில் உள்ள விவரங்களை கூறியுள்ளார். அவர் கூறியதை சரி பார்த்த டிரைவர் கார்த்திக் திருப்புவனம் போலீசில் நிலையம் வருமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸ் நிலையம் வந்த அவரிடம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன், பாரதீய ஜனதா பிரமுகர் பிரபு ஆகியோர் முன்னிலையில் கடம்பவனத்திடம் பர்சை ஒப்படைத்துள்ளார். பர்சைப் பெற்றுக் கொண்ட கடம்பவனம் டிரைவர் கார்த்திக்கு நன்றி தெரிவித்தார். டிரைவர் கார்த்திக்கின் நேர்மையை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.


Next Story