மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு


மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
x

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி கரூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது. இந்த போட்டியில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு வயதுக்கு உட்பட்டோர் எடை பிரிவில் நடந்த இந்த போட்டியில் குளித்தலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச்‌ சேர்ந்த 24 மாணவிகள் கலந்துகொண்டனர். அதில் 10 மாணவிகள் தங்கப்பதக்கமும், 7 மாணவிகள் வெள்ளி பதக்கமும், 4 மாணவிகள் வெண்கல பதக்கம் என 21 மாணவிகள் வெற்றி பெற்று பரிசு பெற்றுள்ளனர். மேலும் 17 மாணவிகள் மாநில அளவில் நடைபெற உள்ள டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனரையும் பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா மற்றும் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Next Story