ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு


ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு
x

முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விருதுநகர்

ஆலங்குளம்,

மதுரை மண்டல அளவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கான ஈட்டி எறிதல் போட்டி விருதுநகர், வி.எஸ்.வி.என்.பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. மதுரை மண்டலத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக்கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிவகாசி கல்லமநாயக்கர் பட்டி, எஸ்.எம்.எஸ்.பாலிடெக்னிக்கல்லூரி 2-ம் ஆண்டு மாணவி மகேஸ்வரி இந்த போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். இவரை எஸ்.எம்.எஸ்.கல்லூரி தாளாளர் முத்துவாழி, கல்லூரி டீன், டாக்டர் பிரபுதாஸ் குமார், பாலிடெக்னிக்கல்லூரி முதல்வர் ராஜநாயகன், கல்லூரி நிர்வாக அதிகாரி மாரிமுத்து, கல்லூரி மக்கள் தொடர்பு அதிகாரி பொன்னுச்சாமி, விளையாட்டுதுறை பேராசிரியர் சங்கரசேகரன் ஆகியோர் பாராட்டினர்.


Next Story