குங்பூ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு


குங்பூ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
x

மாநில அளவிலான குங்பூ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடலூர்

கடலூர்,

ஊசூ விளையாட்டு மற்றும் தற்காப்பு கலையின் மாநில அளவிலான 19-வது சப்-ஜூனியர் விளையாட்டு போட்டி கோவை மாவட்டத்தில் கடந்த 18 மற்றும் 19-ந் தேதிகளில் நடந்தது. இந்த போட்டியில் கடலூர் மாவட்ட குங்பூ மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் அவர்கள் 4 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கம் வென்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

இதையடுத்து வெற்றி பெற்று கடலூர் திரும்பிய மாணவர்களை, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது குங்பூ மாஸ்டர்கள் தாஸ், சுரேஷ், சந்தன்ராஜ், வினிஸ் மற்றும் கடலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story