மாநில கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
மாநில கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
விருத்தாசலத்தில் நடந்த மாநில கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் கோவில்பட்டி அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். கராத்தே போட்டியில் அருண், ரோகித் ஆகியோர் முதலிடமும், சிலம்பம் போட்டியில் விக்னேஷ், பாலதர்சன், அம்பரீஷ் ஆகியோர் முதலிடமும், கவின்ராஜ், ஆனந்தலட்சுமி 2-ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி ஆசிரியர் காசி மாரியப்பன் ஆகியோரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் பாராட்டி பரிசு வழங்கினார்.
Related Tags :
Next Story