வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
x

மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகமது பாஹிம் மற்றும் பாசிம் ஆகியோர் தமிழ்நாடு மாநில அளவில் 17 வயதுக்குட்பட்ட பீச் வாலிபால் போட்டியில் கலந்துக்கொண்டு விளையாடி வெள்ளி பதக்கம் வென்றனர்.வெற்றிபெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நாகை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் திட்டச்சேரி நகரம் சார்பில் கேடயம், பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் அபுஹாசிம், தொகுதி துணைத்தலைவர் சகுபானுதீன், நகர செயலாளர் தாரிக், செயல்வீரர் ஜியாவுதீன் மற்றும் திட்டச்சேரி மன்சூர் வாலிபால் கிளப் துணைத்தலைவர் நஸ்ரூதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story