காவிரி விவகாரத்தில் காங்கிரசும், பாஜகவும் மாநில கட்சிகளாக செயல்படுகின்றன: சீமான் தாக்கு
காவிரி விவகாரத்தில் காங்கிரசும், பாஜகவும் மாநில கட்சிகளாக செயல்படுகின்றன என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சென்னை,
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்காத அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது சீமான் கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் காங்கிரசும், பாஜகவும் மாநில கட்சிகளாக செயல்படுகின்றன. காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களுக்கு உண்மையாக இருக்க அம்மாநில ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட நடிகர்கள் போராடினால் அவர்களுக்கு தமிழகத்தில் திரையரங்குகள் கிடைக்காது" என்றார்.
Related Tags :
Next Story