காங்கிரஸ் கவுன்சிலர் கைது
கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி
கடையம்:
நேஷனல் ஹெரால்டு வழக்கிற்காக ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரித்து வருவதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ராகுல் காந்தியை மத்திய அரசின் அமலாக்கத்துறை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதை கண்டித்தும், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடையம் சுற்றுவட்டார பகுதிக்கு வருவதை கண்டித்தும், கடையத்தை சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் மாரிக்குமார் பதாகை ஏந்தி போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையிலான போலீசார், மாரிக்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story