நாகையில் விமான நிலையம் அமைக்க வேண்டும்- காங்கிரஸ்


நாகையில் விமான நிலையம் அமைக்க வேண்டும்- காங்கிரஸ்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:30 AM IST (Updated: 30 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

நாகப்பட்டினம்

காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான சுர்ஜீத் சங்கர், பிரதமர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் மேற்கு பகுதியில் கோயம்பத்தூரில் விமான நிலையம் உள்ளது. வடக்கு பகுதியில் சென்னையிலும், தெற்கில் திருவனந்தபுரத்திலும் விமான நிலையம் உள்ளது. கிழக்கு எல்லையான நாகையில் புவியியல் அடிப்படையில் விமான நிலையம் அமைந்தால், எல்லை பாதுகாப்பில், நாட்டிற்கே பாதுகாப்பு அரணாக அமையும். இந்த விமான நிலையம் விமானப்படைக்கும் உதவியாக இருக்கும்.

கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், அறந்தாங்கி வரை வசிக்கும் மக்கள் திருச்சி விமான நிலையம் செல்வதைவிட நாகை விமான நிலையத்துக்கு வருவது எளிதாக இருக்கும். நாகையை சுற்றி 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு எந்த விமான நிலையமும் இல்லை. எனவே இங்கு விமான நிலையம் அமைந்தால் போக்குவரத்து எளிதாக அமையும். எனவே மத்திய, மாநில அரசுகள் நாகையில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story