காங்கிரசார் மாலைநேர தர்ணா


காங்கிரசார் மாலைநேர தர்ணா
x

காங்கிரசார் மாலைநேர தர்ணா

கன்னியாகுமரி

திருவட்டார்:

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தைக் கண்டித்து திருவட்டார் வட்டார காங்கிரஸ் சிறுபான்மைப்பிரிவு சார்பில் ஆற்றூர் சந்திப்பில் மாலைநேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு திருவட்டார் வட்டார காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜே.ஜாண் வெர்ஜின் தலைமை தாங்கினார். குமரி மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெபா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரெத்தினகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர்கள் ஜாண் சேவியர், பால்மணி, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் செலின்மேரி, ஷர்மிளா ஏஞ்சல், வேர்க்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபகுமார், மகிளா காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டூவர்ட், மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஷாஜன் கிறிஸ்டா, மாவட்ட விவசாய பிரிவு காங்கிரஸ் தலைவர் எபனேசர், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஜோஸ், ஆற்றூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார், மூத்த தலைவர்கள் தங்கநாடார், சார்லீஸ், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர்கள் ஜெய்சிங், வின்ஸ் எல்ஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story