இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு


இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு
x

நெல்லையில் இந்திரா காந்தி நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவத்து மரியாதை செலுத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, மாவட்ட செயலாளர் மணி, துணைத்தலைவர் வண்ணை சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், களக்காட்டில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story