பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் வைத்திருந்த காங்.பிரமுகர் வீட்டு சிறையில் வைப்பு


பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் வைத்திருந்த காங்.பிரமுகர் வீட்டு சிறையில் வைப்பு
x

அவர் வெளியேறாதபடி போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியில், காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சம் என்பவரது வீட்டில் இருந்து 'கோ பேக் மோடி' என அச்சிடப்பட்ட 370 கருப்பு நிற பலூன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர் வெளியேறாதபடி போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story