நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் மொட்டை போட்டு ஆர்ப்பாட்டம்


நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் மொட்டை போட்டு ஆர்ப்பாட்டம்
x

எல்.ஐ.சி., ஸ்டேட் வங்கி சொத்துகளை அதானிக்கு தாரை வார்த்ததைக் கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் மொட்டை போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

எல்.ஐ.சி., ஸ்டேட் வங்கி சொத்துகளை அதானிக்கு தாரை வார்த்ததைக் கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் மொட்டை போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை பாளையங்கோட்டை எல்.ஐ.சி மற்றும் ஸ்டேட் வங்கி எதிர்புறம் நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்.ஐ.சி மற்றும் ஸ்டேட் வங்கி சொத்துகளை அதானிக்கு தாரை வார்க்கும் மத்திய பா.ஜனதா அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.

மொட்டை போட்டு...

ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி மற்றும் வங்கியின் நிதியை அதானி அபகரிப்பதை சுட்டிக் காட்டும் வகையில், அதானி முகமூடி அணிந்த ஒருவர், காங்கிரஸ் தொண்டரின் தலையில் மொட்டை போட்டார். அப்போது தொண்டர்கள் மத்திய அரசையும், அதானியையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநகராட்சி கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், சொக்கலிங்ககுமார், மாவட்ட மகளிர் அணி தலைவி ஸ்டெல்லா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story