இந்திய கம்யூனிஸ்டு கட்சி பேரவை கூட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி பேரவை கூட்டம்
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி பேரவை கூட்டம்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் பாலகுரு தலைமை தாங்கினார். கட்சியின் நிர்வாகிகள் வீரப்பன், செங்குட்டுவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகானந்தம், வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் ஒன்றியத்தில் 3-வது தவணையாக ரூ.1 லட்சத்தை கட்சி நிதியாக ஒன்றிய துணைச்செயலாளர் பாலகுரு, மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியனிடம் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story