களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்


களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விஜய்வசந்த் எம்.பி. பற்றி அவதூறு பரப்பியதாக களியக்காவிளை போலீஸ் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

விஜய்வசந்த் எம்.பி. பற்றி அவதூறு பரப்பியதாக களியக்காவிளை போலீஸ் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் செய்திகள் பதிவிட்ட நபரை கைது செய்ய வேண்டும் என கேட்டு காங்கிரஸ் கட்சியினர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.பி. பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கேட்டு போலீஸ் நிலையத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்தப் போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திவாகர், மேல்புறம் ஒன்றிய தலைவர் ரவிசங்கர், விளவங்கோடு பஞ்சாயத்து தலைவி லைலா ரவிசங்கர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மனுக்களை பெற்றுக் கொண்ட போலீசார் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து காங்கிரசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story