காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 May 2023 12:30 AM IST (Updated: 14 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்


கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 10-ந்தேதி நடந்தது. இதையொட்டி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை பிடித்து தேர்தலில் வெற்றி பெற்றது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் காமராஜர் சிலை அருகே பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் நடந்தது.


இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் தலைமை தாங்கினார். முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாநகராட்சி மண்டல தலைவர் கார்த்திக், மாவட்ட பொதுச்செயலாளர் வேங்கைராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் சித்திக், மச்சக்காளை, சிவாஜி, குப்புசாமி, மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜாபேகம், இளைஞரணி தலைவர் அலியார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


சாணார்பட்டி, வேடசந்தூர்


இதேபோல் கோபால்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாணார்பட்டி வட்டார காங்கிரஸ் சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் சபியுல்லா, ராஜேந்திரன், சின்னச்சாமி, ஆதியான், ஆனிமுத்து, சுப்பிரமணி, வெல்லக்குட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


வேடசந்தூர் பஸ் நிலையம் அருகில் மற்றும் ஆத்துமேட்டில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.


வட்டார தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, வட்டார பொது செயலாளர் பகவான், வட்டாரதுணை தலைவர் ஜாபர்அலி, இளைஞர் காங்கிரஸ் தொகுதி செயலாளர் கண்ணன், நகர துணை தலைவர் கன்னியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


மணிக்கூண்டு


திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் சலீம்சேட் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜோசப் மார்ட்டின் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.


மதசார்பின்மை வெற்றி பெற்றுள்ளது என கோஷம் எழுப்பப்பட்டன. இதில் காங்கிரஸ் மாநில பேச்சாளர் பாலு, முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜாஜி, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் முருகன், சவரியப்பன், முருகானந்தம், பொட்டுச்செல்வம், வக்கில் அணியினர் நாசர், ஹில்லர், மோகன், லலிதா உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



Next Story