காங்கிரஸ் கட்சியினர் அறவழிப்போராட்டம்
நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நெய்வேலி;
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் நெய்வேலி மெயின் பஜார் காந்தி சிலை அருகில் அறவழிப்போராட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும், விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜன், ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் ரவிக்குமார், நெய்வேலி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஐ.என்.டி.யு.சி. தலைவர் குள்ளபிள்ளை, நெய்வேலி நகர பொதுச்செயலாளர் இளங்கோவன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராமலிங்கம், நகர துணை தலைவர் கரிகாலன், நெய்வேலி நகர் தலைவர் ரஞ்சித், இந்திரா நகர் தலைவர் அற்புதராஜ், மாவட்ட துணை தலைவர் சிவாஜி மரிந்துவான், இளைஞர் அணி முருகன், வட்டார தலைவர்கள் ராமச்சந்திரன், கலியபெருமாள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.