காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல் போராட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல் போராட்டம்
x

விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

விருதுநகர் நகர காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ெரயில் மறியல் போராட்டம் செய்ய போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து நகர காங்கிரஸ் தலைவர் நாகேந்திரன் தலைமையில் காங்கிரசார் இந்நகர் தேசபந்து திடலில் இருந்து ெரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்தனர். ெரயில் நிலைய நுழைவுவாயிலில் உள்ள காந்திசிலை முன்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நகர சபை துணை தலைவர் பாலகிருஷ்ண சாமி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சிவகுருநாதன் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.Next Story