காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்; 75 பேர் கைது
தூத்துக்குடியில் ரெயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் ரெயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரெயில் மறியல் போராட்டம்
ராகுல் காந்தி எம்.பி. பதறி பறிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று 1-ம் கேட்டில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கினார்.
இதில், அதானி நிறுவனங்களுக்கு 6 விமான நிலையங்கள் நடத்துவதற்கு மத்திய அரசு எவ்வாறு அனுமதி அளித்தது?, மத்திய அரசின் ஒத்துழைப்போடு அதானி நிறுவனங்களுக்கு 13 துறைமுகங்கள், அரசாங்க சலுகைகளுடன் வழங்கியது ஏன்?, இதற்கெல்லாம் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்.
நாட்டின் பிரதமராக ராகுல்காந்தி பதவி ஏற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. என்பது போன்ற கோஷங்கள் எழுப்பினர்.
75 பேர் கைது
தொடர்ந்து தூத்துக்குடி ரெயில் நிலையம் பகுதியில் தூத்துக்குடி-மைசூரு விரைவு ரெயிலை மறித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், ஐசன்சில்வா, செந்தூர்பாண்டி, மாவட்ட துணை தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன் மாவட்ட செயலர்கள் கோபால், நாராயணசாமி, மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த மத்திய பாகம் போலீசார், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர்.