காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கே.பி.எஸ். எம். கனிவண்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் லட்சுமணன், வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன், ஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கைது செய்யப்பட்ட ராகுல் காந்தியை உடனே விடுதலை செய்ய வேண்டும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விசாரணை என்ற பெயரில் அலக்கழிக்க கூடாது.
கோஷங்கள்
காங்கிரஸ் கட்சியினர் மீது பொய் வழக்கு போடும் அமலாக்க துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் வட்டார தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன், வட்டார துணைத் தலைவர்கள் தென்னரசு, ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் கிள்ளிவளவன், கட்சி நிர்வாகி ஆறுமுகம், மொராஜ், அம்பேத்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.