காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார்.

வட்டார தலைவர்கள் ரகு, ஜார்ஜ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில எஸ்.டி, எஸ்.சி. பிரிவு பொதுச் செயலாளர் சித்தரஞ்சன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், அவரது செயல்பாடுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story