காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சங்கராபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஆஷாபீஜாகீர்உசேன் தலைமை தாங்கினார். மாவட்டசெயலாளர் மண்ணாங்கட்டி, சமூக ஊடகத்துறை பிரிவு ஆதில், காமில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வக்கீல் முகம்மதுபாஷா வரவேற்றார். மாநில பொதுக்குழுஉறுப்பினர்கள் துரைராஜ், செல்வராஜ், மாவட்ட துணை தலைவர் இதாயத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். அரசுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி எதிராக செயல்படுவதாக கூறி, அதனை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டார தலைவர்கள் அபுல்கலாம், ராஜேந்திரன், சுலைமான், ஜெகதீசன், நாராயணன், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் கயும்பாஷா, கவுஸ், மொய்தீன், அப்துல் கனி, நிர்வாகிகள் பெரியசாமி, ஜெயராமன், சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.