காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெங்கடசேபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகியவற்றின் சொத்துக்களை அதானிக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும், என்று வலியுறுத்தினர்.


Next Story