காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் ராஜா, பரதன், ராஜேந்திரன், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ராமானுஜம் வரவேற்றார். இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வடவீரபாண்டியன், மாவட்ட மகளிர் அணி தலைவர் சித்ராசெல்வி, மாநில எஸ்.சி., எஸ்.டி., பிரிவு செயலாளர் பூவாலை மதிவாணன் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நகர செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story