அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
x

திருப்பத்தூரில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகர காங்கிரஸ் சார்பில் திருப்பத்தூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி தரையில் அமர்ந்து சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது. நகரமன்ற உறுப்பினர் இ.பரத் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். நகர தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய தலைவர் ஜானி ஜாவித், முன்னாள் நகர தலைவர் வெங்கடேசன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் நெடுமாறன் சிவாஜி, விஜயராகவன், பார்த்திபன் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அக்னிபத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ராணுவம் பலவீனமடையும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Next Story