அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்

அக்னிபத் திட்டத்தை கண்டித்து கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வடக்கு நகர தலைவர் ஸ்டீபன் பாபு முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து 1 மணி நேரம் அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் அக்னிபத் திட்டத்தை கண்டித்து குளித்தலை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் குளித்தலை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை தாங்கினார். குளித்தலை வட்டார தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பொன்னுச்சாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story