மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்தும், டெல்லியில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமழபாடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்தும், ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணை தலைவர் ராகவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வில்பர்ட், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ரேணுகாதேவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story