ராகுல்காந்தி தகுதி நீக்கம்:காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகம்
காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்
திண்டிவனம்,
எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடு முழுவதும் சத்தியாகிரகம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று திண்டிவனம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் திண்டிவனத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து, சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு திண்டிவனம் நகர தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் புவனேஸ்வரன், நிர்வாகிகள் ராமமூர்த்தி, சக்திவேல், தட்சிணாமூர்த்தி, இருதயராஜ், மெடிக்கல்வெங்கட், வக்கீல் பொன்ராஜா, வக்கீல் அஜிஸ், ஜானி, ஜெய் கணேஷ், வரதராஜ், பாபு, டோமினிக் கலியமூர்த்தி, சாமிநாதன், அஜித், தில்குமார், ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story