காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்


காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்
x

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு செய்யப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் சத்தியாகிரக போராட்டம் என்னும் அறவழிப் போராட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்ட தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.கே.காமராஜ், சின்னதுரை, கோபாலகிருஷ்ணன், வினோதினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வெற்றிசெல்வன் வரவேற்றார்.

இந்த போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. அப்போது ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு செய்யப்பட்டதை கண்டித்தும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மோகன், கோபாலகிருஷணன், மோகன்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் கதிர்காமன், மாவட்ட பொருளாளர் சண்முகம், மாவட்ட துணை தலைவர்கள் அண்ணாச்சி, டாக்டர் மணி உள்பட மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் முருகபூபதி நன்றி கூறினார்.


Next Story