ராஜீவ் நினைவு ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு


ராஜீவ் நினைவு ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு
x

திருவண்ணாமலைக்கு வந்த ராஜீவ் நினைவு ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

திருவண்ணாமலை

கன்னியாகுமரியில் கடந்த 15-ந் தேதி தொடங்கிய ராஜீவ் நினைவு ஜோதி ஊர்வலம் வருகிற 21-ந் தேதி ஸ்ரீபெரும்புத்தூரில் நிறைவடைய உள்ளது.

இந்த ராஜீவ் நினைவு ஜோதி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று வந்தது.

வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் வந்த ராஜீவ் நினைவு ஜோதியை செங்கம் சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகில் காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் செங்கம் ஜி.குமார், திருவண்ணாமலை நகர தலைவர் என்.வெற்றிசெல்வன் ஆகியோரது தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர்.

இந்த ராஜீவ் நினைவு ஜோதி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அவலூர்பேட்டை சாலையை சென்றடைந்தது. தொடர்ந்து சேத்துப்பட்டு, ஆரணி ஆகிய பகுதிகளுக்கு சென்றது.


Next Story