கவர்னரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


கவர்னரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

சட்டசபை உரையில் தலைவர்கள் பெயரை படிக்காத கவர்னரை கண்டித்து குமரி மாவட்டத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

சட்டசபை உரையில் தலைவர்கள் பெயரை படிக்காத கவர்னரை கண்டித்து குமரி மாவட்டத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரசார்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தமிழக சட்டசபை உரையின் போது முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் உள்ளிட்ட பல தலைவர்களின் பெயர்களை படிக்காமல் புறக்கணித்தார் என கூறியும், இதற்கு கண்டனம் தெரிவித்தும் பத்மநாபபுரம் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவட்டார் தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடந்தது. திருவட்டார் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெபா தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட கவுன்சிலர் செலின் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், பேரூராட்சி மன்ற தலைவர்கள் சுஜீர் ஜெபசிங் குமார் (வேர்க்கிளம்பி), அகஸ்டின் (பொன்மனை), பொன்.ரவி (திற்பரப்பு), வேர்க்கிளம்பி பேரூராட்சி துணை தலைவர் துரைராஜ் மனுவேல், மாவட்ட செயலாளர்கள் ஜாண் இக்னேசியஸ், வர்க்கீஸ், திருவட்டார் வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாண் வெர்ஜின், குலசேகரம் தொடக்க கூட்டுறவு சங்க தலைவர் மோகன் தாஸ், ஆற்றூர் டேவிட், காட்டாத்துறை காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாம் டிக்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குழித்துறை

இதுபோல் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் குழித்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர். பினுலால்சிங் தலைமை தாங்கினார். மேல்புறம் மேற்கு ஒன்றிய தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான ரவிசங்கர், குழித்துறை நகர தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். இதில் விளவங்கோடு பஞ்சாயத்து தலைவர் லைலா ரவிசங்கர், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டூவர்ட், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர் ஆம்ளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

வில்லுக்குறி

வில்லுக்குறி குருசடி சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயம் தலைமை தாங்கினார். குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பால்துரை, வில்லுக்குறி பேரூர் காங்கிரஸ் தலைவர் பிரகாஷ்தாஸ், வட்டார செயல் தலைவர் ஆல்பர்ட் ஜீவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாநில பேச்சாளர் அந்தோணிமுத்து ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதுபோல் மாவட்டத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story