கோவில்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதானி குழுமத்தில் பொதுத்துறை மூலமாக தகுதியை மீறி பணம் வழங்கிய மத்திய அரசை கண்டித்தும், அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பொதுமக்களின் முழுத்தொகையை ஊர்ஜிதம் செய்ய வலியுறுத்தியும், அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.பிரேம்குமார், கே.உமாசங்கர்மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story