சங்கரன்கோவிலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தேரடி திடலில் காங்கிரஸ் கட்சி எஸ்சி, எஸ்டி சார்பில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் புஷ்பராஜ திலகம், மகளிர் அணி மாவட்ட தலைவி சேர்மக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் முருகையா, சுந்தர்ராஜன், கோடீஸ்வரன், பரமசிவன், தாவீது, வெங்கடேசன், வேலுச்சாமி, முனியசாமி, மகளிர் அணி நிர்வாகிகள் சக்தி முப்புடாதி, வேலம்மாள், சங்கர் ரதி, சமுத்திரவள்ளி, பொன்னுத்தாய், செல்லம்மாள் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story