திங்கள்சந்தையில் ஸ்மிரிதி இரானி உருவபொம்மையை எரித்து காங்கிரசார் போராட்டம்

திங்கள்சந்தையில் ஸ்மிரிதி இரானி உருவபொம்மையை எரித்து காங்கிரசார் போராட்டம்
x

திங்கள்சந்தையில் ஸ்மிரிதி இரானி உருவபொம்மையை எரித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

திங்கள்சந்தையில் ஸ்மிரிதி இரானி உருவபொம்மையை எரித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை அரசியல் நாகரிகம் இன்றி மத்திய மந்திரி ஸ்மரிதி இரானி விமர்சித்ததாக கூறி நேற்று திங்கள்சந்தையில் அவருடைய உருவபொம்மையை எரித்து குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் தலைமை தாங்கினார். குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் முன்னிலை வகித்தார்.

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், திங்கள்சந்தை பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் விஜூமோன், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் வேணு, ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story