காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

மேலப்பாளையத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மேலப்பாளையம் சந்தை முக்குப்பகுதியில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் மகேந்திரபாண்டியன், மேலப்பாளையம் மண்டல தலைவர் ரசூல் மைதீன், பாளையங்கோட்டை மண்டல தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு பேசினார்.

கோஷங்கள்

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை அதானி குழுமத்திற்கு விற்பதை கண்டித்தும், கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும். எல்.ஐ.சி. மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள முதலீடுகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்திப்பதை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், பரணி இசக்கி, சொக்கலிங்க குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story