தபால் அலுவலகம் முன்பு காங்கிரசார் முற்றுகை போராட்டம்
ஏர்வாடியில் தபால் அலுவலகம் முன்பு காங்கிரசார் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
திருநெல்வேலி
ஏர்வாடி:
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர்வாடி பஜாரில் உள்ள தபால் அலுவலகம் முன்பு முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எஸ்.பால்ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சத்யாகிரகப் போராட்ட ஒருங்கிணைப்பாளர் கே.எம்.அசன் ஷேக் கலந்து கொண்டார்.
போராட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் தன்ராஜ், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், வட்டார காங்கிரஸ் தலைவர்கள், நகர காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story